தெலங்கானா மாநிலம், ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் நிறுவன பேருந்து இருசக்கர வாகனம் மீதும், சாலையோர தடுப்பின் மீதும் மோதி விபத்துக்குள்ளாது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபருக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் அருகிலிருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பேருந்து ஓட்டுநர் உறங்கியதே விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.