புதுச்சேரியில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
புதுச்சேரி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் லூர்து. இவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள முத்தமிழ் நகரில் பழுது பார்க்க விட்டிருந்த தனது ஆட்டோவை எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது, பின் தொடர்ந்து வந்த மூன்று மர்ம நபர்கள் அவரைச் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதில் படுகாயமடைந்த லூர்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.