சென்னை ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசைப் பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
படத்தில் நடிப்பதற்காகப் பெற்ற 6 கோடி ரூபாய் முன் பணத்தைத் திரும்ப தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சொத்து உத்தரவாதத்தைத் தாக்கல் செய்யாததால், அவரது சொத்துக்களை முடக்க உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்தக் கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்யுமாறு பட நிறுவனத்துக்கு அனுமதி வழங்கினார்.
இதனிடையே, சென்னை ஈசிஆரில் உள்ள சொகுசு பங்களாவை ஜப்தி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசைப் பெற நடிகர் ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.