ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய அணி என்ற மோசமான சாதனையைத் தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாப்பிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இதில் மூன்றாவது போட்டியில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்து 431 ரன்கள் சேர்த்தது.
432 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 24.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 155 ரன்கள் மட்டுமே சேர்த்து 276 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய அணி என்ற மோசமான சாதனையைத் தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது.
இருப்பினும் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்று தென்னாப்பிரிக்க அணி தொடரைக் கைப்பற்றியது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக முறை ஒருநாள் தொடரை வென்ற அணி என்ற சாதனையைத் தென்னாப்பிரிக்கா படைத்தது.