உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ராம்நகரில் உள்ள கோட்டாபாக் பகுதியில் சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதை்தனர்.
இந்நிலையில் மார்பளவு மண்ணில் புதைந்த இரு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது.