பீகார் மாநிலம் பாட்னாவில் காருக்குள் இரு குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பீகார் மாநிலம் பாட்னாவின் இந்திரபுரி பகுதியில், கடந்த 15ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், தீபக் குமாரி, லட்சுமி குமாரி என்ற 2 குழந்தைகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் காவல்துறை அலட்சியமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கேட்டு, பாட்னாவில் உள்ள அடல் பாதையில் உள்ளூர் மக்கள், சாலையை மறித்து, டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கூட்டத்தை கலைக்க முயன்ற போலீசார் மீது அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசார் ஏராளமானோர் காயமடைந்தனர்.