ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.
ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய இரு போர்க்கப்பல்களும் ஆல்பா 17 திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க உள்நாட்டு அதிநவீன ரகசிய தொழில் நுட்பத்துடன் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கப்பல்கள், முந்தைய ஷிவாலிக் ரக போர்க்கப்பல்களை விட 5 சதவீதம் பெரியவையாகும். டீசல் இயந்திரங்கள் மற்றும் கேஸ் டர்பைன்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் இந்த கப்பல்கள் பல்வேறு சிறப்பு ஆயுத கட்டமைப்புகளை கொண்டுள்ளன. விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர், இரு அதிநவீன போர்க்கப்பல்களை ஒரே நேரத்தில் நாட்டுக்கு அர்ப்பணிப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த இரு கப்பல்களும் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.