இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை தான் தடுக்காவிட்டால் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா-பாகிஸ்தான் போர் அடுத்தகட்டமாக அணுஆயுதப் போராக மாறியிருக்கும் என்று கூறினார். அதுபோன்ற சூழலில், போர் நீடித்தால் எந்த வர்த்தகமும் செய்ய மாட்டோம் எனக்கூறி 24 மணி நேரம் கெடு விதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் பிறகு, இனி எந்த போரும் நடக்காது என்று இரு நாடுகளும் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபோல் பல சந்தர்ப்பங்களில் வர்த்தகத்தை பயன்படுத்தியதாக கூறிய அவர், இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாகவும் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்தில் அடுத்த 2 வாரங்களில் வலுவான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தார்.