கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணிவகுப்பு, தேர் நிலையம் அருகே தொடங்கியது. தொடர்ந்து, மாரியம்மன் கோவில் வீதி, கிழக்கு காவல் நிலைய வீதி, தாலுகா காவல் நிலையம் வீதி மற்றும் பேருந்து நிலையம் வழியாக சென்று, பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் கொடி அணிவகுப்பு நிறைவடைந்தது.