அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை குண்டர்களாக இருப்பதே திமுகவின் கலாச்சாரம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருவாரூரில் வீட்டின் முன்பு பேனர் வைக்க அனுமதிக்காத நபரை, திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை அடாவடியில் ஈடுபடுவதே திமுகவின் கலாச்சாரம் எனக்கூறியுள்ள அவர், குண்டர்களின் வன்முறையால் செழித்து வளரும் கட்சி திமுக எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், திமுகவினரின் அராஜகங்களுக்கு மன்னிப்பு கேட்காமல் முதலமைச்சர் ஸ்டாலினால் ஒளிந்து கொள்ள முடியாது எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.