அமெரிக்காவில் சாலை விபத்தை ஏற்படுத்தி 3 பேர் உயிரிழப்புக்குக் காரணமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜிந்தர்ச் சிங்கிற்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 28 வயதேயான அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என இந்தியாவில் உள்ள அவரது கிராமமே கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் செயின்ட் லூசி கவுன்டியில் அண்மையில் நடந்த சாலை விபத்து, காரில் பயணம் செய்த 3 பேரின் உயிரைக் குடித்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டுநர் ஹர்ஜிந்தர்சிங், நீளமான டிரக்கைச் சாலையில் திருப்ப முயற்சித்தபோது, அதிவேகத்தில் வந்த கார், டிரக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார்ச் சுக்குநூறாக நொறுங்கிச் சிதைந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர்ச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறிப்பிட்ட சாலையில் வாகனத்தைத் திருப்புவது குற்ற செயல் என்று அமெரிக்கச் சட்டம் சொல்கிறது.
அப்படியிருந்தும் தடைச் செய்யப்பட்ட சாலையில், ஓட்டுநர் ஹர்ஜிந்தர்சிங் தடையை மீறி டிரக்கைத் திருப்பியதே விபத்துக்குக் காரணமாக சொல்லப்படுகிறது. இதற்கு ஆதரவாக அமெரிக்கா முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
அமெரிக்கச் சாலைகளில் கனரக லாரிகளை இயக்கும் வெளிநாட்டு ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அமெரிக்க உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், அமெரிக்க லாரி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைக் குறைத்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரு கொடிய விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர் ஹர்ஜிந்தர்ச் சிங்கின் குடும்பத்தினரும் முழு கிராமமும் அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறும், அமெரிக்கா கருணைக் காட்ட வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் டர்ன்தரன் மாவட்டத்தில் உள்ள ரடௌல் கிராமத்தைச் சேர்ந்த ஹர்ஜிந்தர்சிங்கிற்கு ஆதரவாக இணையதளத்தில் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர். அதில் அவருக்கு 28 வயதுதான், விபத்து அவருடைய துரதிருஷ்டம் என்று தெரிவித்துள்ளனர்.
ஹர்ஜிந்தரின் வழக்கை முறையாக வாதிட ஆலோசகர் வழங்கப்படுவதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்ய வேண்டும் என ஷிரோமணி அகாலிதள எம்.பி., ஹர்சிம்ரக் கவுர் பாதல் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் லாரி தொழிலில் 20 சதவிகிதப் பஞ்சாபி மற்றும் சீக்கிய ஓட்டுநர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் ஒன்றரை லட்சம் சீக்கிய ஓட்டுநர்களைப் பாதிக்கும் என்றும் அவர்க் கூறியுள்ளார்.
மேலும், ஹர்ஜிந்தரின் வழக்கை முறையாக வாதிடுவதற்கு, அவருக்கு ஆலோசகர் அணுகல் வழங்கப்படுவதை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். விபத்து சம்பவத்தால், வெளிநாட்டு லாரி ஓட்டுநர்களின் பணி விசாக்களை அமெரிக்கா முடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.