உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம் பம்பையில் செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறவுள்ள உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கேரள அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்குக் கேரள மாநில பாஜகக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்து மதம் பற்றித் திமுக தலைவர்கள் அவதூறாகப் பேசியதை தமிழ்நாடு பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் சுட்டிக்காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உலக ஐயப்பன் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதென, கேரள முதலமைச்சர்ப் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.