திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கோயில் திருவிழாவில் இருதரப்பினர் இடையே ஏறபட்ட மோதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டைப் பகுதியில் உள்ள பொன்னியம்மன் கோயிலில் கடந்த வாரம் திருவிழா நடைபெற்ற நிலையில், வரவு-செலவு கணக்கு பார்த்தபோது மேளதாளம் அடித்தவர்களுக்குப் பணம் தரவில்லையா எனத் திருவிழா குழுவினரிடம் அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர்க் கேட்டுள்ளார்.
இதனால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், காயமடைந்த சுரேஷ்குமார்த் தரப்பினர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.