2015ம் முதல் 2018ம் ஆண்டு வரைத் திண்டுக்கல் மாநகராட்சியில் 17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் கூறி முன்னாள் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது
திண்டுக்கல்லில் மாநகராட்சியில் 2015 முதல் 2018 வரையிலான கணக்குகள் தணிக்கைச் செய்யபட்டது.
அதில் குடிநீர் வழங்கல், பாதாளச் சாக்கடை, தொடக்கக் கல்வி ஆகியவற்றில் 17 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
மேலும் அப்போதைய மாநகராட்சி ஆணையர் மனோகர், துணை வருவாய் அலுவலர் சாரங்க சரவணன் ஆகியோர்ச் சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அக்காலக்கட்டத்தில் பணியில் இருந்த மனோகர், சாரங்க சரவணன், கணேசன், சுவாமிநாதன், நடராஜன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.