திமுக ஆட்சியை அகற்றினால் மட்டுமே தமிழகத்தையும், இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் எனப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இந்து வியாபாரிகள் சங்கத்தின் 5வது ஆண்டு விழா மற்றும் மாநாடு நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர்க் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஹெச்.ராஜா, திருச்செந்தூர்க் கோயிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்ற பெருந்திட்ட பணிகளில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகக் கூறிய அவர், பள்ளிகளுக்கு அருகே திமுகவினரே கஞ்சாவை விற்று வருவதாகத் தெரிவித்தார்.