லண்டனில் உள்ள இந்திய உணவகத்திற்குத் தீ வைத்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் உள்பட 2 பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது.
காண்ட்ஸ் ஹில் பகுதியில் உள்ள இந்தியன் அரோமா என்ற உணவகத்திற்குக் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இந்தச் சம்பவத்தில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர்ப் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனையும், 54 வயது நபரையும் போலீசார்க் கைது செய்துள்ளனர்.