தஞ்சை மாவட்டம் புண்ணியநல்லூர் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பள்ளியின் மேற்கூரைக் கடந்தாண்டு இடிந்து விழுந்ததால், சமையல் அறையில் பாடம் நடத்தப்படுவதாகப் பெற்றோர் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.