கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநாயகர்ச் சிலைகளை வைத்து வழிபட விதவிதமான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் தமிழ்நாடு மட்டுமின்றிக் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் விநாயகர்ச் சதுர்த்தி விழா அன்று சுவாமி சிலைகளை வைத்து வழிபடுவதற்காக அப்பகுதிகளில் ஆண்டுதோறும் இந்து அமைப்புகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் ஓசூர், தேனிக்கனிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அயோத்தி ராமர்க் கோயில் பாணி உள்ளிட்ட வடிவங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.