MAKE IN INDIA திட்டம் MAKE FOR THE WORLD என்ற பாய்ச்சலை நோக்கி நகர்ந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமாதாபாத்தில் மாருதி சுசூகி நிறுவனத்தின் மின்சாரக் கார், பேட்டரி உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு மேக் இன் இந்தியா திட்டத்தின் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சாரக் கார்கள் மற்றும் பேட்டரிகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக அவர்க் கூறினார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். MAKE IN INDIA திட்டம் தற்போது MAKE FOR THE WORLD என்ற பாய்ச்சலை நோக்கி நகர்ந்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.