செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை மக்கள் கட்டி வைத்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பள்ளிப்பேட்டை கிராமத்தில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 3 பேர் திருட முயன்றுள்ளனர். அப்போது அருகில் வசிப்பவர்கள் பார்த்ததால் 3 பேரும் தப்பி ஓட முயன்றுள்ளனர்.
இதில் ஒருவனை பிடித்த மக்கள் கட்டி வைத்து தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.