ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, டெல்லியில் அந்த அமைப்பின் 3 நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது.
இந்தக் கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து 1500 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். விளையாட்டு, கலை, ஊடகம், நீதித்துறை, அரசியல் எனப் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த பிரபலங்கள் இந்தக் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர். .
ஆர்எஸ்எஸ் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதிலளிப்பது, மக்களை எப்படித் தங்கள் அமைப்பை நோக்கி ஈர்ப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.