கோவை மாவட்டம் சூலூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நடைபெற்ற கண்காட்சியில், கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ‘கணினி விநாயகர்’, ‘AI விநாயகர்’ மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் விநாயகர்க் கவனத்தை ஈர்த்தன.
சூலூர் அருகே நீலாம்பூர்ப் பகுதியிலுள்ள தனியார்க் கல்லூரியில், விநாயகர் சதுர்த்தியையொட்டி மாணவர்கள் வடிவமைத்த விநாயகர்ச் சிலைகளின் கண்காட்சி நடைபெற்றது.
கம்ப்யூட்டர் விநாயகர், வெற்றிலை விநாயகர், ஆப்ரேஷன் சிந்தூர் விநாயகர், காய்கறி விநாயகர், நவதானிய விநாயகர், சாக்லேட் விநாயகர், மற்றும் AI விநாயகர் எனப் பல்வேறு வகையான சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தக் கண்காட்சியில், மாணவர்களின் புதுமையான படைப்புகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன. வெற்றிப் பெற்ற சிலைகளை வடிவமைத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பாரம்பரியத்தை நவீனத் தொழில்நுட்பத்துடன் இணைத்து மாணவர்கள் உருவாக்கிய சிலைகள், அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.