திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பள்ளி மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட இளைஞரைப் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
மண்மலையில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் ஆனைமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவிகளிடம், இளைஞர் ஒருவர்த் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பெற்றோரிடம் மாணவிகள் தெரிவித்ததை அடுத்து, அங்கு வந்த அவர்கள், போலீசார்க் கண்முன்னே அந்த இளைஞரைச் சரமாரியாக தாக்கினர்.
தொடர்ந்து அவரைப் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர்த் தண்டா பகுதியைச் சேர்ந்த வினித் என்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால், மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வரும் நேரங்களில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.