விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 12:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணியும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் தயாரிக்கப்படும் விநாயகர்ச் சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் விநாயகர்ச் சதூர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும் சென்னையில் கொண்டாடப்படும் விநாயகர்ச் சதூர்த்தி பண்டிகைத் தனித்துவமிக்கதாக திகழ்கிறது. சென்னையில் வீடுகள் மட்டுமல்லாது தெருக்களில் வைத்து வழிபடும் விநாயகர்ச் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போதே விநாயகர்ச் சதூர்த்திக்கான கொண்டாட்டம் தொடங்கிவிட்ட நிலையில் அதன் ஒருபகுதியாகச் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சென்னைக் கொசப்பேட்டையில் களிமண், காகிதக் கூழ் ஆகிய எளிதில் கரையக்கூடிய பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிலைகளுக்கு நடப்பாண்டு வரவேற்பு அதிகரித்துள்ளது.

மண்ணில் இருந்து சிலையை உருவாக்கி, அதனை உலர வைத்து, பளபளக்கும் வண்ணங்கள் அடித்து, கண்களுக்கு உயிரூட்டும் வரையிலான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நுணுக்கமான ஆபரணங்கள், வண்ணமயமான அலங்காரங்கள், கையால் வடிவமைக்கப்பட்ட முக பாவனைகள் எனத் தனித்துவத்துடன் வடிவமைக்கப்படும் ஒவ்வொரு சிலைகளையும் தன்னுடைய கைக்குழந்தைகளைப் போல தயாரிப்பாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். அனைத்து விதமான சிலைகளின் விற்பனையும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நீரில் எளிதில் கரையக்கூடிய எக்கோ பிரண்ட்லி சிலைகளுக்கே அதிக வரவேற்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கலை, பக்தி, வியாபாரம் ஆகிய மூன்றையும் இணைந்து உருவாக்கும் இந்த விநாயகர்ச் சதூர்த்தி, பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் சிலைத் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

ஆண்டுக்கு ஆண்டு பெருகிவரும் நகரமயமாதலின் காரணமாக விநாயகர்ச் சிலைகளை தயாரித்துப் பாதுகாப்பதற்கான போதுமான இடவசதி இல்லாத நிலையில், அதற்கெனத் தனி இடத்தை அரசே ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கைச் சிலை தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags: Ganesha Chaturthi celebration: People are eager to buy colorful idolsHolidayவிநாயகர் சதுர்த்திவிநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்விநாயகர் சதுர்த்தி பண்டிகை
Share
Tweet
SendShare
Previous Post

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

Next Post

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies