சென்னை, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட நியாயவிலைக் கடைகளில் சர்வர் பிரச்னை காரணமாகப் பொருட்களை வாங்க நீண்ட நேரம் காத்திருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரேஷன் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், கைரேகை, கண் பதிவேடு மூலம் பதிவு செய்யப்பட்டுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சிக் கடைகளில் சர்வர்ப் பிரச்னையால் தங்களது பொழுது கடைகளிலேயே கழிவதாகப் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.
எனவே, பொருட்கள் எளியவகையில் கிடைக்க அரசு வழிவகைச் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.