அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர்ப் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நட்சத்திர வீரரான ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் – அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல்காரஸ் 6-4, 7-5 மற்றும் 6-4 என்ற நேர்ச் செட் கணக்கில் வெற்றிப் பெற்று 2-வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.