திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பணம் கேட்டு மிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்க் குண்டர் சட்டத்தின் கீழ்ச் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசிகத் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளைக் கொண்டாட அக்கட்சி பிரமுகர்க் குமார், அப்பகுதியில் உள்ள தனியார்த் தொழிற்சாலையில் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆலை நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து குமாரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் அவர் மீது குண்டர்ச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.