திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்க் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 150 கிலோ கொழுக்கட்டைப் படைக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டைத் தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர்ச் சதுர்த்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது.
செப்டம்பர் 10ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சி விநாயகருக்கும் தலா 75 கிலோ என 150 கிலோ எடையில் கொழுக்கட்டைகள் நைவேத்தியம் செய்யப்பட்டது.
பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், தேங்காய் ஆகிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டைகளைக் கோயில் அர்ச்சகர்கள் தோளில் சுமந்தபடி எடுத்துச் சென்று சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைச் செய்தனர். பின்னர், பக்தர்களுக்குக் கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.