ஏரல் அருகே உள்ள வண்டிமலைச்சி அம்மன் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள, ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை ஏராளமானோர்க் கண்டு ரசித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வண்டிமலைச்சி அம்மன் கோயிலில், இளைஞர்கள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர்ச் சதுர்த்தி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு விநாயகர்ச் சதுர்த்தியையொட்டி ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் விநாயகர்ச் சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ளது.
ராணுவ உடையுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் விநாயகர்ச் சிலையில் 4 கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
2 கைகளில் துப்பாக்கியைப் பிடித்தப்படியும், 2 கைகளில் தேசியக்கொடியை ஏந்தியப்படியும் விநாயகர்ச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ராணுவ உடை மற்றும் தொப்பி அணிந்தபடி பாதுகாப்பு எல்லையில் கம்பீரமாக நிற்கும் விநாயகரை ஏராளமான பொதுமக்கள் தரிசித்தனர்.