டெல்லியில் கார் மோதியதில் நிலைதடுமாறி டயரில் சிக்கிய நபர்த் தரதரவென இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23-ம் தேதி டெல்லிச் சமய்பூர் பட்லி பகுதியில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது அவ்வழியாக வந்த கார்ப் பலமாக மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த நபர், டயர்த் தலையில் ஏறி விடாமல் இருக்க முயற்சித்தார்.
ஆனால், அதிவேகமாக வந்த கார்க் கட்டுப்பாட்டை இழந்ததால் அந்த நபர் உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
அருகில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்ற மிரட்சியில் இருந்து மீள்வதற்குள், சிவப்பு நிற காரில் விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பினார். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.