பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள மாதோபூர்த் தலைமையகம் அருகே மழை வெள்ளத்தில் 22 சிஆர்பிஎப் வீரர்களும், பொதுமக்கள் 3 பேரும் சிக்கித்தவித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய இந்திய ராணுவம், ஹெலிகாப்டர் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்டது.
பழைய அடுக்குமாடி கட்டடத்தின் மேல் ஹெலிகாப்டரைச் சாதுர்யமாக இறக்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது சினிமாவை மிஞ்சிய காட்சியாக அமைந்தது.