தேனியில் தடையை மீறி விநாயகர்ச சிலையுடன் ஊர்வலமாகச் சென்ற இந்து மக்கள் கட்சியினரைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேனி நேரு சிலையில் இருந்து இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
அப்போது, தடையை மீறி சென்றதாகக் கூறி, அவர்களை போலீசார்த் தடுத்து நிறுத்தினர். மேலும், விநாயகர் சிலையை பறிமுதல் செய்து முல்லைப்பெரியாறு ஆற்றில் கரைத்தனர்.