கோவைச் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ரத்தின விநாயகர்க் கோயிலில் 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், மஹா அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்து முன்னணியின் முதல் விநாயகர் இங்கு வைத்து வழிபடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோவை மாவட்டத்தில் 2,402 விநாயகர்ச் சிலைகள் வைத்து பூஜைச் செய்யப்படுகிறது.