அமெரிக்கா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தத்தால் டிரில்லியன் டாலர்களைக் கஜானாவில் கொண்டு வந்து சேர்த்துள்ளோம் என டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குக் கிடைக்கும் வருவாய் பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், இங்கிலாந்து, சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
அதனால் வெளிநாடுகள் அமெரிக்கக் கஜானாவுக்கு பில்லியன்களை அல்லாமல், டிரில்லியன் டாலர்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளன எனக் கூறினார்.