சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கி உதவும் ((ஆத்மி நிர்பார்)) நிதி திட்டத்தை மறுசீரமைத்து விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா காலத்தில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மூலம், இதுவரை
68 லட்சத்திற்கும் அதிகமான சாலையோர வியாபாரிகளுக்கு 13 ஆயிரத்து 797 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 7 ஆயிரத்து 332 கோடி செலவில் 2030ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 50 லட்சம் வியாபாரிகளை இந்தத் திட்டத்தில் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.