காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. இது தவறுதலாக நடந்த ஒரு துயரமான விபத்து எனவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்துப் பேசியுள்ள மத்திய வெளியுறவு விவகாரத்துறைச் செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும், மிகவும் வருந்தத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
















