தவெகத் திமுகவின் ஏ-டீம் எனவும், ஒரு மாநாடு எப்படி நடைபெறக்கூடாது என்பதற்குத் தவெக மாநாடு சிறந்த உதாரணம் எனவும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
திமுக அரசு வாக்குகளைப் பிரிக்க நடிகர்களை அரசியலுக்குக் கொண்டு வரும் என்றும் கடந்த தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் உருவாக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழக வெற்றிக்கழகம் திமுகவின் ஏ டீம் என்றும் திமுக என்ன பேசுகிறதோ அதைதான் விஜய் பேசுகிறார் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
தவெகச் சார்பில் மதுரையில் நடைபெற்றது மாநாடு அல்ல ரசிகர் மன்ற கூட்டம் என்று கூறியவர் ஒரு மாநாடு எப்படி நடைபெறக்கூடாது என்பதற்குத் தவெக மாநாடு நல்ல உதாரணம் என்று அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.