இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாத திமுகவுக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துக்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையத்தில் இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,
திமுக என்றாலே இந்து விரோத அரசு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றும் ரம்ஜான், கிறிஸ்துமஸ்த்துக்கு வாழ்த்து கூறும் திமுகவுக்கு இந்துக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் 2026 தேர்தலில் இந்து மக்கள் வாக்களிக்காமல் ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறினார்.
தமிழகத்தில் குற்றம் செய்தவர்கள் சிறுபான்மையினராக இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கரூர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் திமுகக் கவுன்சிலருக்கு எதிராகப் பாஜக போராட்டம் நடத்தும் என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டார்.