ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார் தனது தோல் புற்றுநோய் கட்டிகளில் ஒன்று வெட்டி எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், அனைவரும் தங்களது சருமத்தைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் எனவும் மைக்கேல் கிளார் தனது பதிவில் வலியுறுத்தி உள்ளார்.
இவருக்குக் கடந்த 2006-ம் ஆண்டு தோல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் முக்கிய வீரர்களில் ஒருவரான கிளார்க், 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்ல வழிவகுத்தவர் ஆவார்.
115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 டி20 போட்டிகளில் விளையாடிய மைக்கேல் கிளார்க், 16000 ரன்கள் மற்றும் 36 சதங்களை அடித்துள்ளார்.