ஆன்லைன் கேமிங் தடைச் சட்ட மசோதாவால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மொத்தமாக 200 கோடி ரூபாய் வரையிலான வருமானத்தை இழப்பார்கள் எனத் தெரியவந்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக ஆன்லைன் பெட்டிங் சேவை நிறுவனங்கள் பணம் வைத்து விளையாடுவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இதனால் பிசிசிஐக்கு ஸ்பான்ஸர் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மொத்தம் 200 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
MPL ஒப்பந்தம் மூலம் விராட் கோலி ஆண்டுக்கு 12 கோடியும், Dream 11, Winzo ஒப்பந்தங்கள் மூலம் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோர் ஆண்டுக்கு 7 கோடியும் வருவாய் பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.