சென்னைக் கிண்டியில் உள்ள கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
தீயணைப்புத்துறையின் சென்னைத் தெற்கு மாவட்ட அதிகாரி ஆர்நிஷா பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒத்திகை நிகழ்ச்சியில், அவசர நேரத்தில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, ஆபத்தான சூழலில் நோயாளிகளைக் காப்பதற்கும், மருத்துவர்கள் தங்களைத் தற்காத்து கொள்ளவும் இதுபோன்ற ஒத்திகைப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார்.