பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட்டின் நிச்சயதார்த்த செய்தியை அறிந்து பேராசிரியர் ஒருவர் வகுப்பைப் புறக்கணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், கால்பந்து வீரரான டிராவிஸ் கெல்ஸ் என்பவரைக் காதலித்து வந்தார்.
தொடர்ந்து, டெய்லர் ஸ்விஃப்ட், டிராவிஸ் கெல்ஸை மணமுடிக்கப் போவதாக அறிவித்தார். இதுதொடர்பான நிச்சயதார்த்த புகைப்படத்தையும் டெஸ்லர் ஸ்விப்ஃட் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார்.
இந்தச் செய்தியை அறிந்ததும் மனமுடைந்த மேத்யூ என்ற பேராசிரியர் வகுப்பைப் புறக்கணிப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்தச் செய்தியை கேட்ட பின் தன்னால் வகுப்பில் கவனம் செலுத்த இயலவில்லை எனக் கூறி தேர்வையும் ரத்து செய்வதாக அவர் அறிவித்தார்.
இது குறித்த வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், பேராசிரியர் நகைச்சுவையாக அந்தக் கருத்தை தெரிவித்ததாக, பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.