தெலங்கானாவில் கனமழைக் காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
தெலங்கானாவில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாகக் காமரெட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் ரயில்சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.