உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ஜவுளி ஏற்றுமதியை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜவுளி ஏற்றுமதியை விரிவாக்கம் செய்வதற்கு 40 நாடுகளை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளதாகக் கூறியுள்ள அண்ணாமலை, தமிழகத்தில் சில ஆண்டுகளாகவே நியாயமற்ற முறையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, மின் கட்டணத்தைக் குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.