சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேயுள்ள ஜெரினாகாடு பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. தாசில்தார் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற திமுக ஒன்றிய செயலாளர் கேவி ராஜா, முகாமைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.
இதனிடையே, ஜெரினாகாடு பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்துப் பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக வேதனைத் தெரிவித்த மக்கள், பட்டா வழங்க வலியுறுத்தி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்தனர்.