சென்னை மணப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
போரூர் மற்றும் பூந்தமல்லிக்கு இடைப்பட்ட பகுதியில் மெட்ரோ வழித்தட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக முக்கிய சாலைகள் முழுவதும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றபடி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மணப்பாக்கம் மற்றும் அருகிலுள்ள ஜங்ஷன்களில் ஒரு கிலோமீட்டர் தூரத்தை கடக்க 30 முதல் 45 நிமிடங்கள் வரை நேரம் பிடிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அவசர சேவை ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு மோசமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை பராமரிப்புகள் சரிவர செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .