தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கோபுரம் முன்பு, 6 கோடி ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்ட அறநிலையத் துறை அனுமதியளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில், வணிகவளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட போவதில்லை என அறநிலையத்துறை ஏற்கனவே உத்தரவாதம் அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில், திருவண்ணாமலை ராஜகோபுரம் முன் பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவது குறித்த மாற்றுத் திட்டத்தின் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அறநிலையத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று 2 வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், கோயிலுக்கு அருகே அரசு புறம்போக்கு நிலமாகவே இருந்தாலும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது என இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவுறித்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.