விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 29, 2025, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விரிவுரையாளர்களுக்கு 3-மாத சம்பள பாக்கி ஏன்? என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 81 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் 28 பேராசிரியர் அல்லாத ஊழியர்கள் உள்ளிட்ட 109-க்கும் மேற்பட்டோருக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்தி ஆளும் திமுக அரசின் அலட்சியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

“சம வேலைக்கு சம ஊதியம் என்ற தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாத முதல்வர் மு.க. ஸ்டாலின் . தற்போது உழைப்பிற்கான ஊதியத்தையும் அரசு ஊழியர்களுக்குக் கொடுக்க மறுப்பது அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என கூறியுள்ளார்.

கடந்த 2023 முதல் எவ்வித அறிவிப்புமின்றி கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்த உயர்நீதிமன்றம், நிலுவையில் உள்ள ஊதியத்தினை உடனடியாக வழங்க வேண்டுமென கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியதாகவும் அவர் கூறினார்.

அதன்பின்னரே ஏப்ரல் 2025 வரையிலான நிலுவைத்தொகையை ஊழியர்களுக்கு வழங்கிய பல்கலைக்கழகம், கடந்த ஜூன் மாதம் முதலான அவர்களின் ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளது என்றால். ஆளும் அரசுக்கும் அதன் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சட்டத்தின் மீது துளிகூட மரியாதையும் அச்சமும் இல்லை என்பது தானே பொருள்? என தெரிவித்துள்ளார்.

மாதக்கணக்கில் ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் ஊழியர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி சாத்தியமாகும்? திமுக ஆட்சியில் பேராசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடும் அரசுக் கல்லூரிகளைத் தாங்கிப் பிடிக்கும் கௌரவ விரிவுரையாளர்களை அரசு இப்படி வஞ்சிக்கலாமா?

ஒவ்வொருமுறையும் நீதிமன்றங்கள் தலையிட்ட பிறகு தான் உழைக்கும் மக்களுக்கான ஊதியத்தைத் திமுக அரசு வழங்குமா? திமுக அரசின் இந்த ஆணவத்தால் பாடம் கற்பிப்பவர்களின் வாழ்வாதாரமும், பாடம் கற்றுக் கொள்பவர்களின் எதிர்காலமும் ஒருசேர பாழாகிக் கொண்டிருப்பதை முதல்வர் இன்னும் உணரவில்லையா? என வினவியுள்ளார்.

எனவே, பிறர் குடியைக் கெடுக்கும் டாஸ்மாக் கடைகளின் வரவு-செலவு கணக்குகளைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணிக்கும் திமுக அரசு, பிள்ளைகளின் வளமான எதிர்காலத்தை வலுவாக்கும் அரசுக் கல்லூரிகளின் அவலத்தையும் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும். நிலுவையில் உள்ள பல்கலைக் கழக ஊழியர்களின் ஊதியத் தொகையை உடனடியாக விடுவிப்பதற்கு வழிவகை செய்வதோடு, கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தையும் முறைப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMK governmentNainar NagendranTamil Nadu BJP state president Nainar Nagendranlecturers salary issue
ShareTweetSendShare
Previous Post

லோகோவை மாற்றம் செய்யும் முடிவை நிறுத்தியது கிராக்கர் பேரல்!

Next Post

ஜெசிகா பெகுலா, ஜாஸ்மின் பயோலினி 3வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குழித்துறை மேற்கு ரயில் நிலையம் செல்லும் சாலையில் தேங்கிய கழிவுநீர் அகற்றம்!

10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவன் மூன்று முறை யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்!

நீலகிரி : சாலையில் சுற்றிய காட்டெருமை – வாகன ஓட்டிகள் அச்சம்!

சவுதி அரேபியா : வீட்டை சுற்றுலா தலமாக மாற்றிய இளம் பொறியாளர்!

செஞ்சி அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு தொகுப்பு வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள்!

அதிமுக கட்சி விதிகள் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

டயமண்ட் லீக் கோப்பை – நீரஜ் சோப்ரா இரண்டாமிடம்!

”மதராஸி” திரைப்படத்திற்கு U\A சான்றிதழ்!

துருக்கி : அதிவேகமாக காரை இயக்கிய அமைச்சருக்கு ரூ.20.000 அபராதம் விதிப்பு!

“லவ் மேரேஜ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நீலகிரி : பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லை – கிராம மக்கள் புகார்!

12-வது புரோ கபடி லீக் போட்டிகள் தொடக்கம்!

விழுப்புரம் : ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல் – ஆசிரியர் கைது!

அமெரிக்க வரி விதிப்புக்கு தனியார் பல்கலைக் கழகம் எதிர்ப்பு!

ஆசிய கோப்பை : செப். 4-ல் துபாய் செல்லும் இந்திய அணி!

திமுக ஆட்சியில் பெருகி வரும் சமூகவிரோதிகள் : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies