ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி செப்டம்பர் 4 ஆம் தேதி துபாய் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 ஆவது ஆசிய கோப்பைக் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் இந்தியா சார்பில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர்க் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த அணி தொடரில் பங்கேற்கச் செப்டம்பர் 4 ஆம் தேதி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.