நெடுஞ்சாலையில் அதிவேகமாகக் காரை இயக்கிய துருக்கி போக்குவரத்து அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் நெடுஞ்சாலைகளில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்க அனுமதி உள்ளது. ஆனால் துருக்கியின் போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் உரலோக்லு ஒரு நெடுஞ்சாலையில் மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை இயக்கியுள்ளார். இது குறித்த வீடியோவையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், அவருக்கு இந்திய மதிப்பில் 20 ஆயிரம் ரூபாயை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொறுப்பற்ற முறையில் போக்குவரத்து அமைச்சர் வாகனத்தை இயக்கியதாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து வேக வரம்பை தாண்டியதை ஒப்புக்கொண்ட அவர், தவறுக்காகத் தேசத்திடம் மன்னிப்பு கேட்பதாகக் கூறினார்.
மேலும் நெடுஞ்சாலையின் தற்போதைய நிலையைத் தெரிந்து கொள்ளவே காரை இயக்கியதாகவும் அப்துல்காதிர் உரலோக்லு தெரிவித்துள்ளார்.